Friday, July 20, 2018

4 ஆண்டு; 84 நாடுகள்; ரூ.1,484 கோடி செலவு

மோதியின் வெளிநாட்டு பயணம் - 4 ஆண்டு; 84 நாடுகள்; ரூ.1,484 கோடி செலவு

மோதியின் வெளிநாட்டு பயணம் - 4 ஆண்டு; 84 நாடுகள்; 1484 கோடி செலவு
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி - மோதியின் வெளிநாட்டு பயணம் - 4 ஆண்டு; 84 நாடுகள்;ரூ.1484 கோடி செலவு
பிரதமர் மோதி கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பல்வேறு வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணங்களுக்கு 1,484 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த நான்காண்டுகளில் பிரதமர் மோதி 84 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், இந்த பயணங்களுக்கு மோதி பயன்படுத்தும் விமானத்தை பராமரிப்பதற்கு மொத்தம் 1,088 கோடியும், தனியார் விமான பயன்பாட்டுக்கு 387 கோடியும், வெளிநாட்டு பயணங்களின்போது பிரதமர் மோதியின் தொலைபேசி அழைப்புகளுக்கு 9.12 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக வெளியுறத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment