Showing posts with label ரூ.23 கோடி கூடுதல் வருவாய்: வாடகை முறையாக செலுத்தாவிட்டால் கடைகளுக்கு சீல். Show all posts
Showing posts with label ரூ.23 கோடி கூடுதல் வருவாய்: வாடகை முறையாக செலுத்தாவிட்டால் கடைகளுக்கு சீல். Show all posts

Saturday, July 21, 2018

ரூ.23 கோடி கூடுதல் வருவாய்: வாடகை முறையாக சீல் வைக்க நடவடிக்கை

மாநகராட்சி கடைகளுக்கு சந்தை வாடகை நிர்ணயத்தால் ரூ.23 கோடி கூடுதல் வருவாய்: வாடகை முறையாக செலுத்தாவிட்டால் கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை

சென்னை மாநகராட்சி கடைகளுக்கு சந்தை மதிப்பில் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், ஆண்டுக்கு ரூ.23 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முறையாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமாக 152 வணிக வளாகங்கள் உள்ளன. அதில் மொத்தம் 6 ஆயிரத்து 240 கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.12 கோடி வருவாய் கிடைத்தது. மாநகராட்சி வருவாயை உயர்த்தும் விதமாக, மாநகராட்சி கடைகளுக்கு, சந்தை மதிப்பில் வாடகை நிர்ணயிக்குமாறு அரசு உத்தரவிட்டிருந்தது.  அதன் அடிப்படையில் ஒவ்வொரு வணிக வளாகத்திலும் சந்தை வாடகையை நிர்ணயித்து மாநகராட்சி நிர்வாகம் அமல்படுத்தி வருகிறது.  அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.37 கோடி வரை வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் இந்த நட வடிக்கையால் ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி சாலையில் உள்ள மாநகராட்சி கடைக்கு ரூ.3 ஆயி ரத்து 702 என இருந்த மாத வாடகை, ரூ.21 ஆயிரத்து 160 ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மாநகராட்சி கடைகளுக்கான வாடகை மிகவும் குறைவாக இருந்தது. இந்த கடைகள், ஒரு நபருக்கு 9 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும். அதில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகையானது 15 சதவீதம் கூடும்.
இந்நிலையில் மாநகராட்சி வருவாயை உயர்த்தும் விதமாக கடந்த 2007-ம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்ட அரசாணையில், ஒருவருக்கு மாநகராட்சி கடையை வாடகைக்கு விட்டு 9 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த கடைகளுக்கான வாடகை மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும். அப்போது சந்தை நிலவரப்படி வாடகை நிர்ணயிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.