திமுக தலைவர் கருணாநிதி, இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல் நலக் குறைவு காரணமாக பல மாதங்களாக தீவிர அரசியிலில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார் கருணாநிதி. தனது உடல் பரிசோதனைக்காக காவிரி மருத்துவமனைக்கு மட்டும் சென்று வருகிறார். இந்நிலையில் இன்று மீண்டும் அவர் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வழக்கமான சிகிச்சைக்காவே திமுக தலைவர் கருணாநிதி இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை முடிந்ததும் இன்று மாலை அல்லது இரவுக்குள் கருணாநிதி வீடு திரும்புவார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment