Friday, July 20, 2018

ஆந்திராவில் 24-ம் தேதி பந்த்

ஐதராபாத், 
ஆந்திராவில் 24-ம் தேதி பந்த்: ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகளும், எதிராக 126 வாக்குகளும் கிடைத்தன.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு மீது முதன் முதலாக நேற்று காலை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

பாரதீய ஜனதாவின் தோழமை கட்சியான 18 உறுப்பினர்களை கொண்ட சிவசேனா நேற்று நாடாளுமன்றத்துக்கு வராமல் புறக்கணித்தது.

சபை கூடியதும் தெலுங்கு தேசம் உறுப்பினர் சீனிவாஸ் கேசினேனி நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்தார். அப்போது பிஜூ ஜனதாதள உறுப்பினர்கள் 20 பேரும், மத்திய அரசு ஒடிசாவுக்கு அநீதி இழைப்பதாக கூறி சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு தெலுங்கு தேசம் உறுப்பினர் ஜெயதேவ் கல்லா விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இறுதியில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக (அரசுக்கு எதிராக) 126 பேர் வாக்களித்தனர். தீர்மானத்துக்கு எதிராக (அரசுக்கு ஆதரவாக) 325 பேர் வாக்களித்தனர். இதனால் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் 199 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.

இந்தநிலையில்,  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி செய்தியார்களிடம் கூறுகையில்,

ஆந்திர மாநிலத்திற்கு பாஜக சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் அநீதி இழத்ததை கண்டித்து வரும் 24-ம் தேதி ஆந்திர மாநிலம் முழுவதும் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்.  ஆந்திர மாநிலத்திற்கு எந்த தேசிய கட்சியும் சிறப்பு அந்தஸ்து வழங்கினால்  நாங்கள் ஆதரிப்போம்.  எங்கள் ஒரே கோரிக்கை ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment